பக்கம் எண் :

1004
 

நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவினனாகிய சிவபெருமானை, அவனை எஞ்ஞான்றும் தன்னிடத்து நீங்காது கொண்டு நிற்கும், 'திருவலிவலம்' என்னும் தலத்தில் வந்து கண்டு, அவன் அடியவனும், நிலை பெற்ற திருநாவலூரில் தோன்றியவனும், 'வன்றொண்டன்' எனப் பெயர்பெற்றவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, இனிய இசையையுடைய, செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும், மனத்தால் விரும்பிப் பாடவல்லவர்கள், தேவர்கள் விரும்பிப் போற்ற, துன்பம் இல்லாத வானுலகத்தைப் போய் அடைவர்; இது திண்ணம்.

கு-ரை: 'ஓம்பும் நான்மறை, கற்ற நான்மறை' எனத் தனித் தனி இயைக்க. ''அனல்'' என்றது உருவகமாய், அனல்போலும் திருமேனியை உடைய சிவபிரானைக் குறித்தது. அவன் நான்மறையின் முடிந்த பொருளாதலின், ''முற்று அனல்'' என்று அருளினார். 'நான் மறை முற்றனல் ஓம வலிவலந்தனில்' எனவும் பாடம் ஓதுவர், ''ஒலிகொள்'' என்றது, இறந்த கால வினைத்தொகையாய், 'பாடிய' எனப் பொருள் தந்தது. 'வானுலகு விரும்பி ஏத்த, மெலிவில் விண்ணுலகு போய் எய்துவர்' எனக் கூட்டுக.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

 
அங்கு நின்றும் எழுந்தருளி

அளவில் அன்பின் உள்மகிழச்

செங்கண் நுதலார் மேவுதிரு

வலிவ லத்தச் சேர்ந்திறஞ்சி

மங்க பாகர் தமப்பதிகம்

வலிவ லத்க் கண்டேன்என்று

எங்கும் நிகழ்ந்த தமிழ்மால

எடுத்துத் தொடுத்த இசபுனவார்.

-தி, 12 சேக்கிழார்