68. திருநள்ளாறு பதிக வரலாறு: சுந்தரர், திருவாரூரில் சிலநாள்கள் தங்கி வழிபட்டு, பிற தலங்களையும் வணங்கிக் கொண்டு திருநள்ளாறு சென்று வலங்கொண்டு மண்டிய பேரன்பினொடும் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 143) குறிப்பு: இத்திருப்பதிகம், திருநள்ளாற்று இறைவரை வணங்கிய பொழுது, அவரை மறக்கலாற்றாமையை எடுத்து அருளிச் செய்தது. பண்: தக்கேசி பதிக எண்: 68 திருச்சிற்றம்பலம் 688. | செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக் | | கரிய கண்டனை மாலயன் காணாச் | | சம்பு வைத்தழல் அங்கையி னானைச் | | சாம வேதனைத் தன்னொப்பி லானைக் | | கும்ப மாகரி யின்னுரி யானைக் | | கோவின் மேல்வருங் கோவினை எங்கள் | | நம்ப னைநள் ளாறனை அமுதை | | நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | | 1 |
1. பொ-ரை: செம்பொன் போலும் திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிபவனும், கரிய கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத சம்புவும், நெருப்பை அகங்கையில் ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும், குடம்போலும் தலையை உடைய பெரிய யானையின் தோலை உடையவனும், எருதின்மேல் ஏறிவரும் தலைவனும், எங்கள் அருந்துணைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: சம்பு-இன்பத்தை ஆக்குபவன். 'கும்பம்' என்பது, யானையின் தலைக்கு உவமையாகு பெயர். சொற்பின் வருநிலை அணிபட அருளுவார், ''கோவின்மேல் வருங் கோ''என்று,
|