689. | விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை | | வேத கீதனை மிகச்சிறந் துருகிப் | | பரசு வார்வினைப் பற்றறுப் பானைப் | | பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக் | | குரைக டல்வரை ஏழுல குடைய | | கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை | | நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை | | நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | | 2 |
690. | பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப் | | புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச் | | சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத் | | தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக் |
அருளினார். முதற்கண் நின்ற, 'கோ' என்பது வடசொல். 'நம்பன்' என்பது, 'விரும்பப்படுபவன்' என்னும் பொருளதாகலின், அதற்கு, இவ்வாறு உரைக்கப்பட்டது. 2. பொ-ரை: மணத்தைத் தருகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவனும், வேதத்தின் இசையை விரும்புபவனும், அன்பு மிகச்சிறந்து, மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும், பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும், ஒலிக்கின்ற கடலும், மலையும், உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும், ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும், முல்லை நிலத்திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: மிகச் சிறத்தலுக்கு, வினைமுதல் வருவிக்கப்பட்டது. ''சிறந்து''என, குண வினை, குணிமேல் நின்றது, மலைகளை, எட்டென்றலேயன்றி, ஏழென்றலும் மரபேயாம் என்க. 'தொல்லை நரைவிடை' என்பதும் பாடம். 3. பொ-ரை: பூவில் உள்ள மணமும், பொன்னும், மணியும் ஆகிய இவைபோல்பவனும், 'மண், நீர், தீ, காற்று, வானம்' என்னும்
|