பக்கம் எண் :

1007
 
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்

சடைய னைக்கா மரத்திசை பாட

நாவில் ஊறுநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

3


691.தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த

பாலன்மேல் வந்த காலனை உருள

நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை

நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை



ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும், எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும், நன்மையே வடிவானவனும். தேவர்கட்கெல்லாம் தேவனும், தித்திக்கும் தேன்போல இனிப்பவனும், குவளைப் பூப் போலும் கண்களையுடையவளாகிய மங்கைதன் பங்காளனும், கங்கையைத் தாங்கிய சடையை உடையவனும், 'சீகாமரம்' என்னும் இசையாற் பாடுமிடத்து, நாவில் இனிமை மிகுகின்றவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: ''பூவில் வாசம்'' என எடுத்தோதியது, ஏனைய நறுமணங்களில் சிறந்ததாதல் பற்றி. வாசம் முதலிய மூன்றும் சிறப்புப் பற்றி வந்த பொதுமையை யுடையவாக, தேன், இனிமையை உணர்த்தும் சிறப்பினதாதல் பற்றி, அதனை முன்னையவற்றோடு ஒருங்கு ஓதாராயினார். ''காற்று'' என்றது, செய்யுள் பற்றி முறை பிறழ நின்றது, ''சேவின் மேல் வரும் செல்வன்'' என்றது, நகைச்சுவை பயப்பதாய், அவனது முதன்மையை உணர்த்திற்று. ''காவியங்கண்ணி பங்கன், கங்கைச் சடையன்'' என்றதும், 'உடம்பில் ஒருத்தியையும், தலையில் ஒருத்தியையும் உடையவன்'' என்னும் பொருட்டாய், அன்னதாயிற்று. 'சீகாமரம்' என்பதனை 'காமரம்' என்றது, முதற்குறை.'காமரம்' என்னும், பண்ணின் பொதுப்பெயர், 'சீ' என்னும் சிறப்புச் சொல்லோடு புணர்ந்து, ஒருவகைப் பண்ணிற்குப் பெயராய் வழங்கும். இராகங்களுள்ளும் ஒருவகையினை, 'சீராகம்' எனக் குறியிட்டு வழங்குவர்.

4. பொ-ரை: 'அடைக்கலம்' என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை, வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும்,