பக்கம் எண் :

1008
 
விஞ்சை வானவர் தானவர் கூடிக்

கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்

நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

4


692.மங்கை பங்கனை மாசிலா மணியை

வான நாடனை ஏனமோ டன்னம

எங்கும் நாடியுங் காண்பரி யானை

ஏழை யேற்கெளி வந்தபி ரானை

அங்கம் நான்மறை யான்நிறை கின்ற

அந்த ணாளர் அடியது போற்றும்

நங்கள் கோனைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேன.

5



தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும், அறிவு மிக்க தேவர்களும், அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: ''உருள'' என்றது, 'உயிர்நீங்கிக் கிடப்ப' என்றவாறு. ''உதை'' என்றதன்பின். 'உதைத்தல்' என்பது, தொகுத்தலாயிற்று. விஞ்சை - வித்தை; அறிவு; தேவரை. 'புலவர்' என்னும் வழக்கினை நினைக்க. இங்கு, 'இறவாதிருத்தற்கு வழியறிந்தனர்' என, நகை தோன்ற அருளுவார், 'விஞ்சை வானவர்' என்று அருளினார். மிகுதி, உலகு இடங் கொள்ளாமை. அந்நஞ்சினும் மிகப் பெரிய அமுதாய் நிற்றலின், அதனை உண்ண வல்லனாயினான் என்பது திருக்குறிப்பு.

5. பொ-ரை: மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும், இயல்பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும், வானமாகிய நாட்டை உடையவனும், பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும், எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலைவனும், ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்