பக்கம் எண் :

1009
 
693.கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்

காம கோபனைக் கண்ணுத லானைச்

சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்

தூய சோதியை வெண்ணெய்நல் லூரில

அற்பு தப்பழ ஆவணங் காட்டி

அடிய னாஎன்னை ஆளது கொண்ட

நற்ப தத்தைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

6



போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன். வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: ''மாசிலா மணி'' இல்பொருள் உவமை. காணாது எய்த்தமையின், 'திருமால் பிரமன்'என்னாது, 'ஏனமொடு அன்னம்'' என்று ஓதினார். 'அப் பெரிய தேவர்கட்கு அரியனாகியவன், எனக்கு எளிவந்தருளினான்'' என நினைந்து உருகியவாறு. ''எளிவந்த'' என்றதற்கு, 'எளிமை பொருந்தியவனாகிய 'என்று உரைப்பினுமாம். ''மறை'' என்றது, அதனை ஓதுதலை. ஆன் உருபு. ஒடுவுருபின் பொருளில் வந்தது, ''நங்கள் கோனை'' எனப் பின்னர் அனைவரையும் உளப்படுத்து அருளுவாராயினும், தமக்கு எளிவந்த தன்மையை நினைந்து, தமக்குப் பிரானாயினமையை, முன்னர் வேறெடுத்து அருளிச் செய்தார் என்க.

6. பொ-ரை: கற்பக தருவும் பெரிய பொன்மலையும் போல்பவனும், காமனைக் காய்ந்தவனும் கண்பொருந்திய நெற்றியை உடையவனும், சொல் நிலையில் நிற்கும் பொருள் உணர்வாகிய அறியாமையைக் களைந்து, பொருள்கள், நேரே விளங்குமாறு விளக்குகின்ற தூய ஒளியாய் நிற்பவனும், என்னை அடியவனாக, திருவெண்ணெய் நல்லூரில், யாவரும் வியக்கத் தக்க, பழமையதாகத் தீட்டப்பட்டதோர் ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நன்னிலையாய் உள்ளவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: 'பொன்மலை' என்றது, பெரிய நிதிக்குவை போல்பவன்' என்றபடி. 'பொருள்களை நேரே தலைப்பட்டுணராது, சொல்வடிவிலே உணருமாறு உணர்வைத் தடுத்து நிற்பது அக இருளாகிய