பக்கம் எண் :

1010
 
694.மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற

மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த

அறவ னைஅம ரர்க்கரி யானை

அமரர் சேனைக்கு நாயக னான

குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற

கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்

நறைவி ரியும்நள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7



ஆணவமலம்' என்பதும், 'எல்லாப் பந்தமும் நீங்கிய வழியும், இவ்வொரு பந்தம் நீங்குதல் அரிது' என்பதும், 'அது' நீங்கின், இறைவனது திருவடியை அடைதல் எளிது, என்பதும்,

''மூவகை அணுக்க ளுக்கும் முறைமையான் விந்து ஞானம்
மேவின தில்லையாகில் விளங்கிய ஞானம் இன்றாம் ;
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே''

- சிவஞான சித்தி - சூ. 1 - 26

என்றற் றொடக்கத்து மெய்ந்நூற் பகுதிகளான் உணர்ந்துகொள்க. ''நற்பதம்'' என்றது வீட்டு நிலையை; என்னையெனின், அதுவே, எல்லாவற்றினும் மேலாய நன்னிலை யாகலின் என்க.

7. பொ-ரை: அன்று ஒரு பன்றியின்பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும், அன்னதொரு மாயம் வல்லவனும், நால்வர் முனிவர்க்கு ஆல் நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும், தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும், தேவர் சேனைக்குத் தலைவனாகிய, குறவர் மகளாகிய வள்ளிதன் கணவனைப் பெற்ற தலைவனும், நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும், பூக்களின் மணம் பரக்கின்ற திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: 'சென்ற மறவனை' எனக் கூட்டுக. 'மறவனாய்' எனப் பாடம் ஓதி, கிடந்தவாறே யுரைத்தல் சிறக்கும். ''குறவர் மங்கைதன் கேள்வன்'' என்றது. 'முருகன்' என ஒருபெயர்த்