695. | மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை | | மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும் | | வேதனை வேத வேள்வியர் வணங்கும் | | விமல னைஅடி யேற்கெளி வந்த | | தூதனைத் தன்னைத் தோழமை யருளித | | தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும | | நாத னைநள் ளாறனை அமுதை | | நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. | | 8 |
தன்மைத்தாய், ''நாயகனான'' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. ''பொறுக்கும்'' என்ற எதிர்காலச் சொல்லோடு இயைந்தமையின், 'செய்த' என்றது, எதிர்காலத்து இறந்த காலமாம். இது, ''செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம்''
- தொல். சொல். 239 எனச் செய்தெனெச்சத்திற்கு ஓதியவாறுபற்றி உணரற் பாலது. ''விரியும்' என்ற சொற்பெற்றியால், ''நறை'', 'பூவின் மணம்' என்பது உணரநிற்கும். 8. பொ-ரை: மாதராள் ஒருத்திக்குத் தனது உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும், மாணிக்கம் போல்பவனும், தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற, வேத முதல்வனாய் உள்ளவனும், வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும், அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும், தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து, அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: உடம்பின் ஒரு பகுதியைக் கொடுத்தது, அவனது பேரருளை யுணர்த்தும், 'உடம்பில் இடங்கொடுத்தான்' என்பது நயம், ''வேத வேள்வியர் வணங்கும் விமலன்'' என்றது. 'வணங்காது விடினதக்கன் அடைந்த நிலை எய்தும்' என்னும் அச்சத்தாலேனும் அவரால் வணங்கப்படுபவன் என்றவாறு. இறைவன் சுந்தரர் பொருட்டுப்
|