| | 696. | இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை |  |  | எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத் |  |  | துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள |  |  | இருப துந்நெரித் தின்னிசை கேட்டு |  |  | வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த |  |  | வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல |  |  | நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை |  |  | நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. |  |  | 9 | 
 
 பரவையாரிடம் இருமுறை தூது சென்றமை வெளிப்படை. இதனை எடுத்தோதினமையின், இத் திருப்பதிகம், நம்பியாரூரர் தொண்டை நாடு சென்று மீண்டதற்பின் அருளிச்செய்தது என்பது ஐயமின்றி விளங்குதலால், 'தொண்டைநாடு நோக்கிச் செல்லுங்கால் இத்தலத்தை வணங்கி அருளிச்செய்தது' என்றல் பொருந்தாமை யறிக, தொண்டை நாடு நோக்கிச் செல்லும் பொழுது திருக்கடவூரை அடைதற்கு முன்னர் இத்தலத்தை வணங்கிய செயலைக் கூறுமிடத்து, சேக்கிழார், 'திருப்பதிகம் அருளிச் செய்தார்' எனக் கூறாது, வாளா போயினமை, ஓர்ந்துணரற்பாலது. ''எளிவந்த தூதனை'' என்றாரேனும், 'தூதனாய் எளிவந்தவனை' என்றலே திருவுள்ளம் என்க. தூதனாகியதையும், தோழமை தந்ததனையும் எடுத்தோதி, அவனது எளிவந்த கருணையைப் பெரிதும் நினைந்து, 'அவனை யன்றி எனக்கு நினைக்கும் பொருளும் உண்டோ' என உருகியவாறு. 9. பொ-ரை: இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க, அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும், அவனது விளங்குகின்ற பெரிய முடியணிந்த தலைகள் ஒருபதையும், தோள்கள் இருபதையும் நெரித்து, பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு, வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் 'இராவணன்' என்ற பெயரையும், அவனுக்கு அளித்த வள்ளலும், குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன், சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளியுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: ''துலங்கு நீண் முடி ''என்றது. அடையடுத்த ஆகுபெயர். |