பக்கம் எண் :

1013
 
697.செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்

சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை

மறந்து நான்மற்று நினைப்பதே தென்று

வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன

சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்

சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க

கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி

இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே.

10

திருச்சிற்றம்பலம்


தலையையும் தோளையும் நெரித்தது. கால்விரலால் அம்மலையை ஊன்றியாம். 'வலக்கை' என்றது மெலிந்து நின்றது.''வலங்கை'' என எடுத்தோதியது, 'அதனோடொப்பப் பிடிக்கப்படுவது வேறொன் றில்லாத வாள்' என, அதன் சிறப்பு உணர்த்தற்கு, 'இராவணன்' என்பது, 'அழுதவன்' எனப் பொருள் தரும். 'மதிச்சடைமேல்' எனச் சகர ஒற்று மிகுத்து ஓதுதல் பாடம் அன்று. தக்கனது சாபந் தொடராது என்றும் இளைதாய் இனிது, இருத்தலின், ''நலங்கொள்' என்று அருளினார். இனி, இதற்கு, 'அழகு பெற்று விளங்குகின்ற' என்று உரைத்தலுமாம், ''நலங்கொள்'' என்பது, ''சோதி'', என்ற இடப் பெயர் கொண்டது.

10. பொ-ரை: நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை, திருநாவலூரில் தோன்றியவனும், 'சிங்கடி' என்பவளுக்கும் 'வனப்பகை' என்பவளுக்கும் தந்தையும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன், 'இப்பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது' என்று சொல்லி, அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு, இறந்து போதலும், பிறந்து வருதலும் இல்லையாக, பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள்.

கு-ரை: ''சிங்கடி தந்தை, வனப்பகை அப்பன்'' என வகுத்து அருளிச் செய்தார், அவர்மேலுள்ள அன்பினால், சிறத்தலுக்கு வினை முதல் வருவிக்க. ''சிறந்த'' என்றது, அதன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. போதலை, ''இறந்து போக்கு'' என விதந்தமையின், வருதலுக்கும், அவ்வாறு விதந்தோதுதல் திருவுள்ளமாயிற்று. ''ஆகி'' என்றதனை, 'ஆக' எனத் திரிக்க. அன்றி, 'ஆக' என்பதே பாடம் எனலுமாம், இனிதே இருத்தல், துன்பமின்றியே இருத்தல்.