699. | கூடிய இலயஞ் சதிபிழை யாமைக் | | கொடியிடை உமையவள் காண | | ஆடிய அழகா அருமறைப் பொருளே | | அங்கணா எங்குற்றாய் என்று | | தேடிய வானோர் சேர்திரு முல்லை | | வாயிலாய் திருப்புகழ் விருப்பால் | | பாடிய அடியேன் படுதுயர் களையாய் | | பாசுப தாபரஞ் சுடரே. | | 2 |
கு-ரை: 'திரு' என்பது, இப்பொருளதாதல், ''போகமும் திருவும் புணர்ப்பானை'' (தி.7 பா.59 பா.1) என்றதனாற் பெறப்பட்டது. ''செல்வமும்'' என்றே போயினாரேனும், 'அதனால் அடையும் இம்மை இன்பமும்' என்பதும் கொள்ளப்படும். ''சீருடைக் கழல்கள்'' என்றார், வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெறுதலின், ''வாயினால்'' எனப் பின் வருகின்றமையின், 'மனத்தினால்' என்பது பெறப்பட்டது. 'ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்' என்றது, இவ்வுறைப்பினால் 'இப் பிழையை நீ பொறுத்துக்கொள்வாய் எனத் துணிந்து செய்தேன்' என்பதும், ''பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்'' என்றது, 'அங்ஙனம் பொறாது என் கண்ணைக் கெடுத்தது, அறவோனாகிய நினக்கு ஏற்புடைத்தாயிற்றேயெனினும், யான் என் பிழையை உணர்ந்து உன்பால் குறையிரந்து நின்றபின்பாயினும், அதனைப் பொறுத்து, எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும்' என்பதும் குறிப்பித்தவாறாம். இன்னும், 'உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தைக் களையாது கண்டு கொண்டிருத்தல் அருளுடையோனாகிய உனக்குத் தகுவதோ' என்பது, இத்திருப்பதிகம் முழுவதினும் காணப்படுவதாம். 'ஒருவரையும்' என்னும் இழிவு சிறப்பும்மை, தொகுத்தலாயிற்று. 'பாசுபதன்' என்றது, 'பசுபதி' என்பது, பகுதிப் பொருள் விகுதிபெற்று நின்றவாறு. 2. பொ-ரை: உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, 'இறைவனே, நீ எங்குள்ளாய்?' என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக்
|