பக்கம் எண் :

1016
 
700.

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்

வெருவிட வேழம்அன் றுரித்தாய்

செண்பகச் சோலை சூழ்திரு முல்லை

வாயிலாய் தேவர்தம் அரசே

தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்

சங்கிலிக் காஎன்கண் கொண்ட

பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்

பாசுப தாபரஞ் சுடரே.

3



காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய்.

கு-ரை: 'எல்லாவகை நடனங்களும் அமைய ஆடினாய்' என்பார், ''கூடிய இலயம்'' என்று அருளினார். 'உமையவளை மகிழ்விக்க, நடனத்தை நன்கு ஆடுபவனாகலின், சங்கிலியை வருத்திய என் பிழையைப் பொறுத்திலை' என்பது திருக்குறிப்பு. ''பாடிய'' என்றதனை, 'செய்த' என்னும் பெயரெச்சமாகவும், 'செய்யிய' என்னும் வினையெச்சமாகவும், இரட்டுற மொழிந்துரைக்க.

''அற்சனை பாட்டே யாகும்

ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடுக''

(தி. 12 தடுத். புரா. 70)

என்று நீ பணித்தவாறே தலங்கள் பலவற்றிற்கும் சென்று உனது திருப்புகழைப் பாடினேன்; இனியும் அவ்வாறு இடரின்றிச் சென்று, உனது திருமேனியைக் கண்களாரக் கண்டு இன்புறும் வழியே பாடுதல் உளதாவதாம்; ஆதலின், என் கண்ணைக் கொடுத்தருளல் வேண்டும் என வேண்டியவாறாம்.

3. பொ-ரை: விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே, மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே, சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே, சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே, உயிர்களைக்