பக்கம் எண் :

1017
 
701.

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்

பொறிவரி வண்டிசை பாட

அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்

அலவன்வந் துலவிட அள்ளற்

செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்

பாசுப தாபரஞ் சுடரே.

4



காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உன் அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

கு-ரை: 'உன் மனைவியை நீ வெருவச் செய்தாயாயினும், என்மனைவி வருந்தப் பொறுத்தாயல்லை' என, அவனது திருவருளைப் புகழ்வார், ''மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய்'' என்றும், 'சங்கிலியும் என்போலவே உன்னையன்றி வேறு அறியாத தொண்டினளாதலின், அவள்பொருட்டு நீ இது செயற்பாலையே' என்பார். 'சங்கிலிக்கா என்கண் கொண்ட பண்ப'' என்றும் அருளிச் செய்தார். சுவாமிகள் இங்ஙனம், இறைவனது செப்பத்தினைச் சிறப்பித்தோதிய வதனானே, சேக்கிழார்,

''சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்

என்று சாற்றிய தன்மையிற் பாடி''

(தி. 12 ஏ. கோ. பு. 277)


என்று, இதனை விதந்தோதியருளினார். இங்ஙனம் சங்கிலியாரது திருத்தொண்டினை ஏற்று நிற்கும் நிலைமையை நினைத்தலின், ''ஒற்றி மாநகருடையாய்'' என்றும் ஓதினார். 'சண்பகம்' என்னும் வடசொல், 'செண்பகம்' எனத் திரிந்து வருதல் வழக்கு.

4. பொ-ரை: பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில், புள்ளிகளையும், கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட, அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு, அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது