பக்கம் எண் :

1018
 
702.

சந்தன வேருங் காரகிற் குறடுந்

தண்மயிற் பீலியுங் கரியின்

தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்

கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி

வந்திழி பாலி வடகரை முல்லை

வாயிலாய் மாசிலா மணியே

பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்

பாசுப தாபரஞ் சுடரே.

5



திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.

கு-ரை: ''பொன்'' உவமையாகுபெயர். ''வண்டுகளின் இசையைக் கேட்டு, நண்டு, தாமரை மலராகிய படுக்கையின்மேல் உறங்கும்' என்பதும், 'புதுமணம் நீங்கிய பின்னர் வண்டுகள் இசையொழிதலும், நண்டு எழுந்து உலவும்' என்பதும் இதன்கண் அமைந்துள்ள அணிந்துரைகள். 'உலவிட வள்ளல்' என்பது பாடமெனின், 'அவ் வள்ளல்' என்னும், வகரம் தொகுக்கப்பட்டதாக உரைக்க. 'நலத்தமிழ்' என்பது, மெலிந்து நின்றது.

5. பொ-ரை: சந்தன மரத்தின் வேரையும், கரிய அகிலினது கட்டையினையும், மென்மையான மயில் இறகினையும், யானையின் தந்தத்தையும், முத்துக் குவியல்களையும், பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும், பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, மாசில்லாத மணி போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

கு-ரை: சந்தன மரத்தை அடியோடு பெயர்த்துக் கொணர்தலைக் குறிக்க, ''வேரும்'' என, அதனையே குறித்தருளினார். தண்மை, இங்கு மென்மை மேற்று,''குவைகள்'' என்றது இருமருங்கிலும் அவற்றை உளவாக்குதல் நோக்கி, ''பாலி வடகரை'' என்றதனான், இத்தலம், வடதிருமுல்லைவாயிலாதல் பெறப்பட்டது. பத்தாந் திருப்பாடலாலும் இது பெறப்படுவதாம்.