பக்கம் எண் :

102
 

அருச்சனை:

பெருங்கருணையை நினைத்து உயிர் நினைந்து நினைந்து கசிந்துருகப் பாடும் நிலை அருச்சனை எனப்படும். அருச்சனை செய்யுங்கள் என்று ஆற்றுப்படுத்தும் திருக்கழுக்குன்ற நட்டபாடைப் பண் முதலியன இப்பொருட்பகுப்பின்கண் அடங்குவன.

'அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக' என்று இறைவன் பணித்தபடிப் பாடிய அடிகள் பாடல்கள் அனைத்துமே அருச்சனை என்று கொள்ளத்தக்கன. ஆயினும் அருச்சனை செய்யுநெறி, செய்தார் பெற்றவை முதலிய அனைத்தும் பற்றிய கருத்துடையவற்றை இத் தலைப்பில் தனியே ஆய்தல் வேண்டும் என்பது சான்றோர் கருத்துப் போலும்!

"சென்று சென்று தொழுமின்"(தி. 7 ப. 81 பா. 1)
"இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே"

(தி. 7 ப. 81 பா. 2)

"நீளநின்று தொழுமின் நித்தலும் நீதியால்"

(தி. 7 ப. 81 பா. 3)

"வெளிறு தீரத் தொழுமின்"

(தி. 7 ப. 81 பா. 4)

"புலைகள் தீரத் தொழுமின்"

(தி. 7 ப. 81 பா. 5)

"பிழைகள் தீரத் தொழுமின்"

(தி. 7 ப. 81 பா. 5)

"சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே"

(தி. 7 ப. 81 பா. 10)

என்று அருச்சித்தல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றமையின் இப்பதிகம் அருச்சனை யென்ற தலைப்பில் அமைக்கப்பட்டதாகலாம்.

அடிமை:

இறைவன் திருவடிகளில் திளைத்தின்புற்றிருக்கும் உயிர் அத்தகு தொண்டர்களுக்குத் தொண்டு செய்து வீற்றிருக்கும் விழுப்பம் தொண்டு அல்லது அடிமை என்னுந் தலைப்பில் ஆராயத்தக்கது. இதன் கண் அமைந்த திருத்தொண்டத் தொகை சுந்தரர் அருளிய பேரருட் கருவூலம் ஆகும் பெற்றி உடையது. அடியார்க்கு அடிமை செய்யும் அருளாளரின் கனிந்த நெஞ்சினை விளக்கும் இத் தமிழ் மாலை தனித்து ஆராய்ந்து சிந்திக்கவும், ஓதி உய்தி பெறவும் உற்ற துணையாவது எனலாம். திருமுறை ஆய்வாளர் இதன் திறம் எல்லாம்