பக்கம் எண் :

1020
 
704.

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய

வார்குழல் மாமயிற் சாயல்

அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்

அருநடம் ஆடல்அ றாத

திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்

செல்வனே எல்லியும் பகலும்

பணியது செய்வேன் படுதுயர் களையாய்

பாசுப தாபரஞ் சுடரே.

7


705.நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்

நாயினேன் றன்னைஆட் கொண்ட

சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந

தடங்கடல் நஞ்சுண்ட கண்டா



7. பொ-ரை: அழகு பொருந்திய சிவந்த வாயினையும், வெள்ளிய பற்களையும், கரிய நீண்ட கூந்தலையும், சிறந்த மயில் போலும் சாயலையும், அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளையும், அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும், செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

கு-ரை: 'மணிகெழு' என்றது, நகை கூந்தல்களோடும் இயையும். இவ்வாறன்றி, ஏற்புழிக் கோடலால், பவளமும் முத்துமாக உரைத்து, 'வாய், நகை' என்பவற்றோடே இயைத்து, 'கெழு, உவம உருபு' என்றலுமாம். 'அங்கயற்கண்ணார்' என்றது, பெயர்த் தன்மைத்தாய், வாய் முதலியவற்றோடு தொக்கு நின்றது, 'அறாத, தழுவு' என்றவற்றை, தனித்தனி, ''திருமுல்லைவாயில்'' என்றதனோடு இயைக்க. இரவை முன்னர், அருளினார்,'அதுபணி ஒழியுங்காலமாக. அப்பொழுதும் ஒழியாது செய்வேன்' என்றற்கு.

8. பொ-ரை: யாவராலும் விரும்பத் தக்கவனே, அன்று திருவெண்ணெய்நல்லூரில் வந்து, நாய்போன்றவனாகிய என்னை ஆட்கொண்ட சம்புவே, வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற, பெரிய