| |  | செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில் |  |  | தேடியான் திரிதர்வேன் கண்ட |  |  | பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் |  |  | பாசுப தாபரஞ் சுடரே. |  |  | 8 | 
| 706. | மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் |  |  | மாணிதன் மேல்மதி யாதே |  |  | கட்டுவான் வந்த காலனை மாளக |  |  | காலினால் ஆருயிர் செகுத்த |  |  | சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் |  |  | செல்வனே செழுமறை பகர்ந்த |  |  | பட்டனே அடியேன் படுதுயர் களையாய |  |  | பாசுப தாபரஞ் சுடரே. |  |  | 9 | 
 
 கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே, உன்னைத் தேடித் திரிவேனாகிய யான், செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட, பசிய பொன்போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய். கு-ரை: 'தடங்கடல் நஞ்சுண்ட கண்டன்' என்பது, ஒரு பெயர்த் தன்மைத்தாய், ''ஏத்தும்''என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று. அவ்வெச்சமும், ''கண்ட'' என்ற எச்சமும் செயப்படு பொருட் பெயர் கொண்டன. 9. பொ-ரை:  தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல், அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை, அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே, செல்வத்தையுடைய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே, சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய். கு-ரை: 'செல்வம்' என்றன இரண்டும், பொருட் செல்வத்தையும், அருட் |