பக்கம் எண் :

1027
 
713.வந்த வாள்அரக் கன்வலி தொலைத்து

வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே

வெந்த வெண்பொடிப் பூசவல் லானே

வேட னாய்விச யற்கருள் புரிந்த



உள்ளவனே, அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால், செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன்! எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.

கு-ரை: சிவபிரான் காளியோடு நடனப் போர் செய்து, அவளது செருக்கை அடக்கிய புராண வரலாற்றினை,

''ஓடிய தார கன்ற னுடலம் பிளந்தும்

ஒழியாத கோபம் ஒழிய

ஆடிய மாந டத்தெ மனலாடி பாத

மவையாம் நமக்கொர் சரணே''

(தி. 4 ப. 14 பா. 4)

எனத் திருநாவுக்கரசரும்,

தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடி
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ

(தி. 8 திருச்சாழல் - 14)

என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தமை காண்க. விகிர்தன் - உலகியல்பின் வேறுபட்டவன்; கடவுட் பொருள்.

5. பொ-ரை: உலகமாகிய வழிக்கு முதலானவனே, வெந்ததனால் ஆகிய வெள்ளிய திருநீற்றைப் பூச வல்லவனே, அருச்சுனனுக்கு வேட உருவத்தில் சென்று அருள்செய்த சந்திர சேகரனே, தேவர்களுக்குப் புகழுடைய தலைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அந்தணனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண்சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறுயாவர் உளர்! அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த