பக்கம் எண் :

1028
 

இந்து சேகர னேஇமை யோர்சீர்

ஈச னேதிரு வாவடு துறையுள்

அந்த ணாஎனை அஞ்சல்என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.

5


714.குறைவி லாநிறை வேகுணக் குன்றே

கூத்த னேகுழைக் காதுடை யானே

உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்

ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே

சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்

செம்போ னேதிரு வாவடு துறையுள்

அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.

6



கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து, பின்பு அவனுக்கு வாழ்நாள் கொடுத்து விடுத்தாய்; இன்று, என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.

கு-ரை: 'இராவணனை முன்பு ஒறுத்ததோடு ஒழியாது, பின்பு, அவனுக்கு அருள்பண்ணியது போல, இன்று அடியேனை ஒறுத்தொழியாது, அருள்பண்ணுதல் வேண்டும்' என்றபடி. ''அந்தணா'' என்றதும், 'அழகிய தட்பத்தையுடையவனே' என, அவனது அருளுடைமையைக் குறித்தவாறாம்.

6. பொ-ரை: 'குறை' எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே, இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்றதொரு மலை எனத் தக்கவனே, கூத்துடையவனே, குழையணிந்த காதினை யுடையவனே, சிறையை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள, செம்பொன் போல்பவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன்; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால், உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ! என்னை, 'அஞ்சேல்' என்றுசொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.