பக்கம் எண் :

1030
 
716.கோதி லாஅமு தேஅருள் பெருகு

கோல மேஇமை யோர்தொழு கோவே

பாதி மாதொரு கூறுடை யானே

பசுப தீபர மாபர மேட்டி

தீதி லாமலை யேதிரு வருள்சேர்

சேவ காதிரு வாவடு துறையுள்

ஆதி யேஎனை அஞ்சல்என் றருளாய

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.

8



கட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவர் உன்னையன்றி வேறுயாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.

கு-ரை: ''வேங்கை'' என்றது, ஆகுபெயர், ''விதி'' என்றது, 'ஆணை' என்னும் பொருளதாய், விதிவிலக்குகளைக் குறித்தது. 'விதி விலக்குகட்கு முதல்வனானவனே' என்றதனால், 'எனது பிழையைப் பொறுப்பினும், பொறாது ஒறுப்பினும் உன்னையன்றி முதல்வர் வேறுயாருளர்' என்றவாறாயிற்று. திருமாலுக்குச் சக்கரத்தை அருளினமையும், 'வேண்டுவார் வேண்டுவதனை ஈகின்றவன்' என்பதனைக் குறித்தபடியாம். ''செங்கண்'' என்றது, குறிப்பினால், 'நெருப்புக் கண்' என்னும் பொருளைத் தந்தது.

8. பொ-ரை: கோதில்லாத அமுதம் போல்பவனே, அருள் வெள்ளம் பெருகுகின்ற தோற்றத்தை உடையவனே, தேவர்கள் வணங்குகின்ற தலைவனே, உடம்பின் ஒருபாதியில் மங்கை ஒருத்தியது ஒருபங்கினை உடையவனே, உயிர்கட்குத் தலைவனே, மேலானவனே, மேலிடத்தில் இருப்பவனே, நன்மையால் இயன்ற மலைபோல்பவனே, சிறப்புடைய அருள் பொருந்திய வீரனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற முதற்பொருளானவனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.

கு-ரை: ''கோதிலா அமுதே'' என்ற இதனையும், மேற்காட்டிய (தி. 8 கோயில் திருப்.) திருவாசகத்திற் காண்க. கோது - சுவையற்றதாய்க் கழிக்கப்படும் பொருள். ''கோதிலா அமுது''