பக்கம் எண் :

1031
 
717.வான நாடனே வழித்துணை மருந்தே

மாசி லாமணி யேமறைப் பொருளே

ஏன மாஎயி றாமையும் எலும்பும்

ஈடு தாங்கிய மார்புடை யானே

தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே

தேவ னேதிரு வாவடு துறையுள்

ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.

9



என்றதனை, ''காழில் கனி'' (குறள் - 1191) என்றதுபோலக் கொள்க. ''பெருகு'' என்றது, குறிப்புருவகம். இறைவனது வேடங்கள் அவனது பேரருளைப் பொழிவனவாகலின், 'அருள்பெருகு கோலமே' என அருளினார். ''கோலம்'' ஆகுபெயர். தீதில்லாமை, அருத்தாபத்தியால் நன்மையைக் குறித்தது. முப்புரம் எரித்தமை முதலிய அனைத்தும், அருள்காரணமாகவே நிகழ்ந்தன என்றற்கு, ''திருவருள் சேர் சேவகா'' என அருளிச்செய்தார்.

9. பொ-ரை: ஆகாயமாகிய நாட்டை உடையவனே, செல்லும் வழிக்குத் துணையாகிய அமுதம் போல்பவனே, குற்றமில்லாத மாணிக்கம் போல்பவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, பன்றியின் பெரிய கொம்பினையும், ஆமை ஓட்டையும், எலும்பையும், இடப்பட்ட அணிகளாகத் தாங்கிய மார்பையுடையவனே, 'தேன், நெய், பால், தயிர்' இவைகளால் மூழ்குவித்தலை விரும்புகின்றவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் யானை போல்பவனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய்.

கு-ரை: இத்தலத்தில் இறைவனுக்கு, 'மாசிலாமணியீசன்' எனப் பெயர்வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது. ''எயிறு'' என்ற இடத்தும், எண்ணும்மை விரிக்க. ''ஆமை'' ஆகுபெயர். ''ஈடு'' என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகுபெயராய், இடப்பட்ட அணிகலங்களைக் குறித்தது. 'ஈடாக' என ஆக்கச்சொல் வருவிக்க. ஆனைந்தில், நெய் முதலிய சிறப்புடைய மூன்றனையும் எடுத்தோதவே, ஏனைய இரண்டும் உடன்கொள்ளப்படும். ''ஆனை''