பக்கம் எண் :

1034
 
720.சிகரத்திடை இளவெண்பிறை

வைத்தான்இடந் தெரியில்

முகரத்திடை முத்தின்னொளி

பவளத்திர ளோதத்

தகரத்திடை தாழைத்திரள்

ஞாழற்றிரள் நீழல்

மகரத்தொடு சுறவங்கொணர்ந்

தெற்றும்மறைக் காடே.

2

721.அங்கங்களும் மறைநான்குடன்

அங்கங்களும் மறைநான்குடன்

தெங்கங்களும் நெடும்பெண்ணையும்

பழம்வீழ்மணற் படப்பைச்



அருளிச்செய்தார். தாழையையும், வாழையையும் ஒருங்கோதியருளியது, 'நெய்தலும், மருதமும் மயங்கிய நிலம்' என்பது உணர்த்துதற்கு. இவ்வாறே மேலும் மயங்குநிலமாக அருளப்படுவன அறிந்து கொள்க.

2. பொ-ரை: தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின், சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களினிடையே மறைகின்ற பவளக்கூட்டத்தை உடைய அலைகள், தகர மரங்களின் அடியிலும், தாழைமரம், குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும்.

கு-ரை: முகரம் - ஒலி; அஃது, ஆகுபெயராய், சங்கினைக் குறித்தது. 'ஓதத் தகரத்திடை' என்பது பாடம் அன்று. 'கழை, கரும்பு', 'சுரும்பு, வண்டு' என்பனபோல், 'மகரம், சுறா' என்புழி, மகரம், சுறாவின் வகையாம் என்க.

3. பொ-ரை: வேதங்கள் நான்கினோடு, அவற்றின் அங்கங்களையும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம்; அஃது எதுவெனின், தென்னை மரங்களும், நீண்ட பனை மரங்களும் தம் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில், சங்குகளும், விளங்குகின்ற இப்பிகளும், வலம்புரிச் சங்குகளும் அலைகளால்