பக்கம் எண் :

1035
 
சங்கங்களும் இலங்கிப்பியும்

வலம்புரிகளும் இடறி

வங்கங்களும் உயர்கூம்பொடு

வணங்கும்மறைக் காடே.

3

722.நரைவிரவிய மயிர்தன்னொடு

பஞ்சவ்வடி மார்பன்

உரைவிரவிய உத்தமன்னிடம்

உணரல்லுறு மனமே

குரைவிரவிய குலைசேகரக்

கொண்டற்றலை விண்ட

வரைபுரைவன திரைபொருதிழிந்

தெற்றும்மறைக் காடே.

4



எறியப் பட, மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும்.

கு-ரை: "நான்குடன்" என்ற, 'உடன்' என்பது, உயர் பின் வழித்தாய் வரும் ஒருவினை ஒடு உருபின் பொருளது. "தெங்கங்கள்" என் புழி நின்ற, 'அம்' என்பது விகுதிப் புணர்ச்சிக்கண் வந்த சாரியை. "தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்" என, சினைவினை முதலொடு சார்த்தப்பட்டது. "இடறி" என்றதனை, 'இடற' எனத் திரிக்க. இடறுதல், இங்கு எறிதல் மேற்று "கூம்பொடு" என்றதன்பின், 'வந்து' என்பது வருவிக்க. "வணங்கும்" என்றது, தற்குறிப்பேற்றத்தொடு வந்து குறிப்புருவகமாதலின், அதற்கு இதுவே பொருளாதல் அறிக.

4. பொ-ரை: நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவனும், அதனால், புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே, அது, ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது, மேகங்கள் தவழ்கின்ற தலையில், உடைந்த மலைபோல்வனவாகிய அலைகள்மோதி மீள்கின்ற திருமறைக் காடேயாகும்.

கு-ரை: தேவர்களது நிலையாமைத் தன்மையையும், தனது நிலைத்த தன்மையையும் உணர்த்துதற் பொருட்டே சிவபெருமான், தேவர்களது தலைகளையும், எலும்புகளையும் மாலையாக அணித