723. | சங்கைப்பட நினையாதெழு | | நெஞ்சேதொழு தேத்தக் | | கங்கைச்சடை முடியுடையவற் | | கிடமாவது பரவை | | அங்கைக்கடல் அருமாமணி | | உந்திக்கரைக் கேற்ற | | வங்கத்தொடு சுறவங்கொணர்ந் | | தெற்றும்மறைக் காடே. | | 5 |
லும், அவர்களது தலைமயிரைப் பஞ்சவடியாகப் பூணுதலும் செய்வனாகலின், அவர்களது நரையை உணர்த்துதற்கு நரைவிரவிய பஞ்சவடியையும் பூண்பன் எனவும், அவ்வாற்றான் அவனுக்குப் புகழ் உளதாவது எனவும் உணர்க. பஞ்சவடி - மயிரினால் இயன்ற பூணநூல். கடலில் எழுகின்ற ஓசை, அதன் கரையின்கண்ணும் பரவி நிற்றலின், "குரைவிரவிய குலை" என்று அருளினார். குலை - கரை. நிலமயக்கம் உணர்த்தல் திருவுள்ளமாதலின், "சேகரம்" என்றதற்கு, 'மாமரம்' என்பதே பொருளாதல் அறிக. குலசேகரக் கொண்டல் என்பது சுவாமிநாத பண்டிதர் பாடம். 'குலைச் சேகரம்' என்னும் சகரமெய், இசைநோக்கித் தொகுத்தலாயிற்று. அலைகள் மலைபோல் எழுந்து கரைக்கண் வந்து சிதறிப்போதலின், "விண்டவரைபுரைவன" என்று அருளினார். "விண்ட" என்றதனை, துணிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாயதாக உரைக்க. "இழிந்து எற்றும்" என்றதனை, 'எற்றி இழியும்' என மாற்றிக்கொள்க. 5. பொ-ரை: மனமே, 'கங்கையைத் தாங்கிய சடைமுடியையுடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது, கடலினது கைகள் ஆகிய அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய, சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு, கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறா மீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும்' அது பற்றி ஐயமாக நினையாது, அங்குச் சென்று அவனை வணங்கித் துதித்தற்கு ஒருப்படு. கு-ரை: இத் திருப்பதிகத்துள், 'உடையவர்க்கு' என வருவன பாடம் அல்ல. "அம்கை" என்றது உவமையாகுபெயராய், அலைகளைக் குறித்தது. 'அங்கையால்' என உருபு விரிக்க. 'அங்கக் கடல்' என்பது சுவாமிநாத பண்டிதர் பாடம். கரைக்கு ஏற்ற வங்கம் - உயர்ந்த பொருள்களைக் கொணரும் மரக்கலம்.
|