724. | அடல்விடை யினன்மழுவா | | ளினன்நல்ஆர் அணிகொன்றைப் | | படருஞ்சடை முடியுடையவற் | | கிடமாவது பரவைக் | | கடலிடையிடை கழியருகினிற் | | கடிநாறுதண் கைதை | | மடலிடையிடை வெண்குருகெழு | | மணிநீர்மறைக் காடே. | | 6 |
725. | முளைவளரிள மதியுடையவன் | | முன்செய்தவல் வினைகள் | | களைகளைந்தெனை யாளல்லுறு | | கண்டன்னிடஞ் செந்நெல் | | வளைவிளைவயற் கயல்பாய்தரு | | குணவார்மணற் கடல்வாய் | | வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந் | | தெற்றும்மறைக் காடே. | | 7 |
6. பொ-ரை: வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும். கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும். 7. பொ-ரை: புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களை களைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற்கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற்
|