726. | நலம்பெரியன சுரும்பார்ந்தன | | நங்கோனிட மறிந்தோம் | | கலம்பெரியன சாருங்கடற | | கரைபொருதிழி கங்கைச் | | சலம்புரிசடை முடியுடையவற் | | கிடமாவது பரவை | | வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் | | தெற்றும்மறைக் காடே. | | 8 |
கரைக்கண் அக்கடல், வளைந்த சங்குகளோடு, சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும். கு-ரை: 'முளை, வளர், இள' என்னும் மூன்றினையும், "மதி" என்றதனோடு தனித்தனி இயைக்க. "களை களைந்து" என்றது, அன்னதொரு செயலைச் செய்தென்றவாறு. 'வளை வயல், விளை வயல்' என்க. 'வார் மணற் குணகடல் வாய்' என மாறுக. "கடல்" என்றது, ஆகுபெயர். எற்றுதற்கு வினைமுதல், அதனானே கொள்ளக் கிடந்தது. "வளையொடு" என்றதில் "வளை", 'சங்கு' என்னுந் துணையாய், வாளாபெயராய் நின்றது. சலஞ்சலம் உயர்ந்த சங்காதலின், "வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து" என்றதனை, 'முனிவர் வந்தனர்; அகத்தியனும் வந்தான்' என்றாற்போல, சிறப்புப் பற்றி வேறோதியவாறாக உரைக்க. 'சலஞ்சலமும்' என்னும் எச்சவும்மை தொகுத்தலாயிற்று. 8. பொ-ரை: கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாய் நிற்பது, நற்பொருள்கள் மிக்கனவும், வண்டுகள் நிறைந்தனவும், பெரியனவுமாகிய மரக்கலங்கள் பொருந்திய கடலினது கரையைமோதி மீள்கின்ற அலைகள், வலம்புரிச் சங்குகளையும், சலஞ்சலச் சங்குகளையும் கொணர்ந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும். இதனை அறிந்தோமாகலின், நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோமாயினோம். கு-ரை: கங்கைச் சலம்புரிசடை முடியுடையவற் கிடமாவது" என்றதனை முதலிலும், "நங்கோனிடம் அறிந்தோம்" என்றதனை ஈற்றிலும் வைத்து உரைக்க.
|