728. | பாரூர்பல புடைசூழ்வள | | வயல்நாவலர் வேந்தன் | | வாரூர்வன முலையாள்உமை | | பங்கன்மறைக் காட்டை | | ஆருரன தமிழ்மாலைகள் | | பாடும்மடித் தொண்டர் | | நீரூர்தரு நிலனோடுயர் | | புகழாகுவர் தாமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திருமறைக்காட்டை, நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும், வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடுகின்ற, அப்பெருமானது திருவடித் தொண்டர்கள், நீர் சூழ்ந்த நிலத்தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள். கு-ரை: 'தமிழ் மாலைகளால்' என உருபு விரிக்க. நிலனோடு உயர்தலாவது, நிலவுலகு உள்ளதுணையும் நிலை பெறுதல். "பொன்றுந்துணையும் புகழ்" (குறள் - 156. ) என்றதன் பொருளை நோக்குக. சேரமான் பெருமாள் நாயனார் புராணம் | நிறைந்த மறைகள் அர்ச்சித்த | நீடு மறைக்காட்டு அருமணியை | இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து | போற்றி யாழைப் பழித்தென்னும | அறைந்த பதிகத் தமிழ்மாலை | நம்பி சாத்த அருட்சேரர் | சிறந்த அந்தா தியில்சிறப்பித் | தனவே யோதித் திளைத்தெழுந்தார். 87 | - தி. 12 சேக்கிழார் |
|