730. | புரமவை எரிதர வளைந்தவில் லினனவன் | | மரவுரி புலியதள் அரைமிசை மருவினன் | | அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின் | | றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. | | 2 |
731. | நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன் | | கூறணி கொடுமழு வேந்தியொர் கையினன் | | ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள் | | ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. | | 3 |
2. பொ-ரை: திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும், மரவுரியையும் புலித்தோலையும் அரையிற் பொருந்தியவனும், பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும், இரவின்கண் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே. கு-ரை: 'வில்லினன் நவன்' எனப் பிரிக்க, சிவபிரான் மரவுரி உடுத்தல், ஈண்டுப் பெறப்படுகின்றது. நிரத்தல் - நிரம்பக் கிடத்தல் 'இரந்தவன்' என்பது பாடம் அன்று. "ஆடி" என்றதுபோல, "விரும்பி" என்றதும், பெயர்; எண்ணின்கண் வந்த வினையெச்சமுமாம். 3. பொ-ரை: நீறணிந்த மேனியை யுடையவனும்., சினங் காரணமாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும், பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும், நீரை அணிந்த, ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய, இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே. கு-ரை: "நெருப்பு", 'சினம்' என்பாரும் உளர். 'ஏந்திய' என்னும் அகரம் தொகுத்தலாயிற்று "சடையழல்" என்னும் உருவகம், "வளர்" என்னும் சிலேடைவினை கொண்டது. 'வளர் அடிகள்' என இயைத்து, இறந்தகால வினைத்தொகை யாக்குக. 'அணி' என்றதனால், ஏறு, கொடியாயிற்று.
|