பக்கம் எண் :

1046
 
738.குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர்

கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்

தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்

எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே.

10



பாடமாயின், 'படகம் என்னும் பறையோடு' என உரைக்க. இதற்கு, 'இடவகை பட' என்புழிப்பகர ஒற்றுத் தொகுத்தலாம்.

10. பொ-ரை: கரகத்தையுடைய உறியை உடையசமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும், உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும், ஒலிக்கின்ற கழலை அணிந்த, தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற, 'அரகர' என்னும் ஓசையுடன், எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.

கு-ரை: படம் - துணி. பின் - பின்னப்பட்டது; ஆக்கப் பட்டது. இனி, "படம்" என்றது, ஆகுபெயரால், நூற்கயிற்றைக் குறித்தது என்றலுமாம். விடக்கு - ஊன். "விடக்கினை ஒழித்தவர்" என்றது, 'ஊன் உண்போராகிய புத்தர் போலாதவர்' என்பது குறித்து நின்றது. 'விடக்கினை ஒழித்தவர்' என்றது ஆகுபெயராய் அவரது இயல்பை உணர்த்தி நின்றமையின், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றாது (தொல். எழுத்து. 157. ) வல்லெழுத்து மிக வேண்டுமிடத்து இயல்பாயிற்று. பொய்யைப் பொய்யென்று உணர்தல்தானே, மெய்யை மெய்யென்று உணர்தலாகிய பயனை எய்துவிக்குமாதலின், அவர்களையும் வேறோதினார். 'தண்டி' என்னும் பெயர்க் காரணம் உணர்த்துவார், "தண்டுடைத் தண்டி" என்று அருளினார். 'அவன் இனம்' என்றது, சிவகணங்களை, "அர" என்றது ஒலிக்குறிப்புச் சொல். அடியவர்களும், சிவ கணத்தவர்களும் 'அரகர' என்று சொல்லித் துதிக்க, இறைவன் எழுந்தருளியிருக்கின்றான் என்றபடி.

"தண்டிகுண் டோதரன் பிங்கிருடி

சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்

பண்டை யுலகம் படைத்தான் றானும்

பாரை அளந்தான்பல் லாண்டி சைப்பத்

திண்டி வயிற்றுச் சிறுகட் பூதம்

சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்"