பக்கம் எண் :

1047
 
739.வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்

இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை

அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்

பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே.

11

திருச்சிற்றம்பலம்


என்ற திருத்தாண்டகத்தைக் காண்க. (தி. 6 ப. 93 பா. 7) "சுடர்" என்றதன்பின், 'இருக்கும்' என்பது வருவிக்க. இத்திருப்பாடல் தண்டியடிகள் நாயனாரது வரலாற்றைக் குறிப்பதாக வைத்து உரைப்பாரும் உளர்.

11. பொ-ரை: கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய, அரிய தமிழ்ப் பாடலில் வல்ல, வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால், பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல், பெருமையைத் தருவதாம்.

கு-ரை: 'கருங்கடல் வரும்' என மாற்றியுரைக்க. "இருங்குலம்" என்றது, பெருங்குடி வணிகரை. குலம் - கூட்டம். தவர் - தவத்தையுடையவர். பெருமையைத் தருவதனை, "பெருமை" என்று அருளினார். 'பெருங்குலத்தவர் கொடு' என்பது பாடமாயின், 'குலத்தவர்' என்பதனை ஒரு சொல்லாக வைத்து, 'உயர்குலத்தவர் இவற்றைக் கொண்டு துதித்தல், அவர்கட்குப் பெருமை தருவதாகும்' என உரைத்து, 'அங்ஙனங் கொள்ளாதொழியின், அக்குலப் பிறப்பாற் பயனில்லை' என்பது அதனாற்போந்த பொருளாக உரைக்க.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்
 

வரையோடு நிகர்புரிசை

வலம்புரத்தார் கழல் வணங்கி

உரையோசைப் பதிகமெனக்

கிளியோதிப் போய்ச்சங்க

நிரையோடு துமித்தூபம்

மணித்தீபம் நித்திலப்பூத்

திரையோதம் கொண்டிறைஞ்சும்

திருச்சாய்க்கா டெய்தினார்.

-தி.12சேக்கிழார்