746. | சார்ந்தவர் தம்மடிச் சாரேன் | | முந்திப் பொருவிடை யேறி | | மூவுல குந்திரி வானே | | கந்தங் கமழ்கொன்றை மாலைக் | | கண்ணியன் விண்ணவர் ஏத்தும் | | எந்தை இருப்பதும் ஆரூர் அவர் | | எம்மையும் ஆள்வரோ கேளீர். | | 7 |
747. | நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன் | | நிச்சய மேஇது திண்ணம் | | மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன் | | மெய்ப்பொரு ளன்றி யுணரேன் | | பண்டங் கிலங்கையர் கோனைப் | | பருவரைக் கீழடர்த் திட்ட | | அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் | | எம்மையும் ஆள்வரோ கேளீர். | | 8 |
7. பொ-ரை: தொண்டீர், யான், வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன்; இறைவனை அடைந்த அடியாரது திருவடிகளை அடையமாட்டேன்; மணங்கமழ்கின்ற கொன்றை மலரால் ஆகிய மாலையையும், கண்ணியையும் அணிந்தவனும், தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய எம் தந்தை, போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் முற்பட்டுத் திரிபவனேயாயினும், அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது, திருவுள்ளத்தைக் கேட்டறிமின். கு-ரை: ''திரிவானே'' என்றதன்பின், 'ஆயினும்' என்பது வருவிக்க. ''விண்ணவர் ஏத்தும்'' என்றதற்கு, கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. 8. பொ-ரை: தொண்டீர், யான், மெய்ப்பொருளையன்றிப் பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன்; அதனால், அம்மெய்ப் பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களை யன்றிச் சொல்லமாட்டேன்; வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன்;
|