748. | நமர்பிறர் என்ப தறியேன் | | நான்கண்ட தேகண்டு வாழ்வேன் | | தமரம் பெரிதும் உகப்பேன் | | தக்கவா றொன்றுமி லாதேன் | | குமரன் திருமால் பிரமன் | | கூடிய தேவர் வணங்கும் | | அமரன் இருப்பதும் ஆரூர் அவர் | | எம்மையும் ஆள்வரோ கேளீர். | | 9 |
இஃது எனது துணிபும், தளர்வில்லாத குணமும் ஆகும். முன்பு, இலங்கையர் தலைவனாகிய இராவணனைப் பருத்த கயிலாய மலையின்கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். கு-ரை: நெண்டுதல் - கிளர்தல். 'நெண்டிக்கொண்டு' என்றது ஒருசொல்நீர்மைத்து. ''கணமேயுங் காத்தலரிது'' ''தானேயும் சாலுங்கரி'' (குறள் - 29 - 1060) என்றாற்போல, ''நெண்டிக்கொண்டேயும்'' என்றதில் ஏகார இடைச்சொல்லும், உம்மை இடைச்சொல்லும் ஒருங்கு வந்தன. ''பிறிதவண் நிலையலும்'' என்பது இலக்கணமாதலின் (தொல் - சொல் 251) ஏகாரம் தேற்றமும், உம்மை சிறப்புமாம். கலாய்த்தல், ஈண்டு, உண்மைபற்றி வாதிடுதல். 'அங்கலாய்த்தல்' என்ற இழிவழக்கும், 'அங்குக் கலாய்த்தல்' என்பதன் சிதைவே யாகலின், 'கிலாய்ப்பன்' எனப் பாடம் ஓதி, 'உங்கிலாய்ப்பன்' என்றொரு சொல்லைக் கொள்ளுதல் சிறவாமை யறிக. இங்கு சுவாமிகள், தம் தகுதியுடைமையே அருளினார் என்க. 9. பொ-ரை: தொண்டீர், யான், இவர் நம்மவர் என்பதும், அயலவர் என்பதும் அறியமாட்டேன்; நான் உண்மை என்று கண்டதையே கண்டு பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன்; ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன்; தக்க நெறி ஒன்றேனும் இல்லாதேன். முருகனும், திருமாலும், பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
|