பக்கம் எண் :

1058
 
749.ஆசை பலஅறுக் கில்லேன்

ஆரையும் அன்றி யுரைப்பேன்

பேசிற் சழக்கலாற் பேசேன்

பிழைப்புடை யேன்மனந் தன்னால்

ஓசை பெரிதும் உகப்பேன்

ஒலிகடல் நஞ்சமு துண்ட

ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்

எம்மையும் ஆள்வரோ கேளீர்.

10


கு-ரை: ''நமர்'' என்றது, உயிர்க்கு உறுதியாவாரையும், ''பிறர்'' என்றது, அதற்குத் தடையாய் நிற்பாரையும். எனவே, அவர் உயர்ந்தோரும், பொது மக்களும் என்றதாயிற்று.

அறியாமை - பகுத்துணர்ந்து, உயர்ந்தோரைச்சேராமை. ''நான் கண்டதே கண்டு வாழ்வேன்'' என்றது.

காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்ட வாறு.

- குறள் - 849

என்றதனை.

10. பொ-ரை: தொண்டீர், எனக்கு உள்ள அவாவோ பல; அவற்றுள் ஒன்றையும் நீக்கமாட்டேன்; அவ்வவாவினால் யாவரிடத்தும் வெகுளிதோன்றுதலின், எவரிடத்தும் பகைத்தே பேசுவேன்; ஒன்று சொல்லின், பொய்யல்லது சொல்லேன்; எனினும் புகழை மிக விரும்புவேன்; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன். ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.

கு-ரை: ''ஆசை பல'' என்றது ஒரு தொடர். 'அவற்றை அறுக்கில்லேன்' என வேறெடுத்து உரைக்க. 'செயலே யன்றி மனந்தன்னாலும்' என்னும் எச்சவும்மை தொகுத்தலாயிற்று. 'பொருளில் புகழ்' என்பார், 'ஓசை' என்று அருளினார்.