74. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் பதிக வரலாறு: சுவாமிகள், திருவாவடுதுறையை வணங்கித் திருத் துருத்தியை அடைந்து, ''அடியேன் உற்றபிணி வருத்தம் எனை ஒழித்தருள வேண்டும்'' என்று வணங்குவாராய்ப் பணிய, 'இப்பிணி நீங்க இவ்வட குளத்துக்குளி' என்று பெருமான் கூற, அங்ஙனமே அத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து பிணி நீங்கி ஒளிசேர் திருமேனியராகி மிக்க பேரன்பினால் திருக்கோயிலை யடைந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 300) குறிப்பு: இத்திருப்பதிகம், தம் உடம்பிற்பிணியைப் போக்கி அருளிய இறைவரது திருவருளின் மிகுதியை நினைந்து களித்து அருளிச் செய்தது. பண்: காந்தாரம் பதிக எண்: 74 திருச்சிற்றம்பலம் 751. | மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி | | வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் | | அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் | | அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் | | சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் | | குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் | | என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை | | யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. | | 1 |
1. பொ-ரை: மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின், அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற, அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது, அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும், திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும், வீற்றிருப்பவராகிய தலைவரும், தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய
|