752. | கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் | | கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி | | மாடுமா கோங்கமே மருதமே பொருது | | மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி |
அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும், என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது! கு-ரை: 'பொழிந்தபின்' என்பது, 'பொழிந்து' எனத் திரிந்து நின்றது. ''அருவி'' என்றவிடத்து, ஆக்கம் வருவித்து, அருவியாய் வெடிபட இழிந்து என மாற்றியுரைக்க. 'அருவியாய் இழிந்து' என்றதனால், 'மேகங்கள் பொழிந்தது மலையின்கண்' என்பது பெற்றாம். 'எற்றுவிக்கும்' என்பது, 'எற்றும்' எனத் தொகுத்தல் பெற்றது. ''அறிவார்'' என்றது, அதன் காரியம் தோன்ற நின்றது. துருத்தி, ஆற்றிடைக்குறையாகலின், இத் திருப்பதிக முழுதும் காவிரி யாற்றைப் பெரிதும் அணிந்தோதியருளினார் என்க. 'எவன்' என்னும் வினாப் பெயரது மரூஉ வாகிய, 'என்னை' என்பது இன்மை குறித்தது. ''கற்றதனாலாய பயன் என்'' (குறள் - 2) என்பதிற்போல, 'பெருமான், இடர் கெடுத்தான்' என்றன பன்மை யொருமை மயக்கங்கள். இவை இவ்வாறு பின்னும் வருதல் அறிக. இத் திருப்பதிகத்தில் உள்ள திருப்பாடல்கள் பலவும், இரண்டனுருபால் முடிந்தமையின், இவை அகப் பாட்டு வண்ணமாம்; எவ்வாறெனின், ''அகப்பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே'' என்பது இலக்கணமாதலின் (தொல். பொருள் - 525).
2. பொ-ரை: கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும், அவை வேறு காணப்படாதவாறு கோத்தும், கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும், மலைநெற் கதிர்களையும் சிதறியும், இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும், கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும், எனது
|