பக்கம் எண் :

1062
 
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்

பழவினை யுள்ளன பற்றறுத் தானை.

2

753.கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்

கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்

புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும்

போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்

செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்

தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.

3



பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமான, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், பாடும் வகையை அறிகின்றிலேன்!

கு-ரை: கூடுதல், அளவாய் நிற்றலையும், கோத்தல், மிகப் பெருகுதலையும் குறித்தன. வினையிடத்து வரும் எண்ணும்மைகளைப் பின்னரும் விரிக்க. 'புனலேனல்' என்பது பாடம் அன்று. குலை - கரை. மறித்தல் - தகர்தல், துருத்தியாதலின், 'கரை' என்னாது, 'காவிரி' என்றலும் பொருந்துவதேயாம். பாடுமாறு அறியாமை, பாட்டினுள் அடங்காமை பற்றி. இதனை "விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்" என்றாற்போலக் கொள்க. (புறம். - 53)

3. பொ-ரை: கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களையும், மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு, அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும், வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும், வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலுங் கடையேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன்!