பக்கம் எண் :

1063
 
754.பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்

பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்

கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்

கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்

எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை

அருவினை யுள்ளன ஆசறுத் தானை.

4



கு-ரை: வம்பு - நறுமணம்; பழுத்த பழம், நறுமணம் உடையதாதல் அறிக.

புல்குதல் - பொருந்துதல்; இங்கு, சூழ்தலைக் குறித்தது. புகழுமாறு அறியாமைக்கும், மேல்பாடுமாறு அறியாமைக்கு உரைத்தவாறு உரைக்க.

4. பொ-ரை: அருவிகள், பொரிந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள, பின்பு, கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும், வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு, தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!

கு-ரை: பொரியும், கரிக்கும் என்பன - எதுகை நோக்கித் திரிந்தன. "அருவிகள் கவர" என்றதன்பின், 'அதன்பின்' என்பது வருவிக்க. "அருவிகள் கவர" என வேறுபோல அருளினாராயினும், 'அருவிகளாய்க் கவர்ந்து" என்பதே திருவுள்ளம் என்க. "கருதி" என்றது பான்மை வழக்கு. கை - பக்கம். அறியாமை - அவனது பெருமையாலும், தமது சிறுமையாலுமாம்.

5. பொ-ரை: பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களையுடைய யானையது தந்தங்களையும், பொன்னைப்போல மலர்கின்ற,