பக்கம் எண் :

1064
 
755.பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்

பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி

இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி

எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே

சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை

உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.

5

756.புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்

பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி

அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி

ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்

திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை

இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.

6



வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி, எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு, இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைப்பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்.

கு-ரை: "இழிந்திழிந்து" என்ற அடுக்கு, பன்மை குறித்து நின்றது. 'வந்து ஆட' என மாற்றுக. பலபடியாலும் இடைவிடாது போற்றுதலை, 'பிதற்றுதல்' என்று அருளினார்.

6. பொ-ரை: புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும், பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும், நல்ல மலர்களைத் தள்ளிக் கொண்டும், தன்னால் அகழப்படுகின்ற, பெரிய, அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி,