பக்கம் எண் :

1065
 
757.வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்

வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்

கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்

காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்

விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை

உலகறி பழவினை அறவொழித் தானை.

7



முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி, கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றம் உடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், இகழுமாற்றை நினையமாட்டேன்!

கு-ரை: ''வரன்றியும்'' என்ற உம்மையை ''பொன்மணி'' என்ற உம்மைத் தொகையின் பின்னர் இயைக்க. ''கரை வளம்பட'' என, இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. மையைக் கழுவுதலும், பாவத்தைத் தீர்ப்பதன் குறிப்பேயாகும். ஆணவ மலத்திற்கும், 'அஞ்சனம்' என்னும் பெயர் உண்மையை நினைக்க. 'ஒலித்தல்' என்னும் பொருளைத் தருவதாகிய 'அலம்புதல்' என்பது பின்னர், ஒலியுண்டாகக் கழுவுதலையும் குறிப்பதாயிற்று. பெருநோய் உடையார், உலகத்தவரால் இழிக்கப்படுதல் உணர்க. அறிதல், இங்கு நினைதலின் மேற்று.

7. பொ-ரை: அளவில்லாத மாம்பழங்களையும், வாழைப்பழங்களையும் வீழ்த்தியும், கிளைகளோடு சாய்த்தும், மராமரத்தை முரித்தும், கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு, மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து, ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க, விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது, உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன்!