758. | ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப் | | புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக் | | காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் | | கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித் | | தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக் | | குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் | | ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை | | அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை. | | 8 |
கு-ரை: வருடுதல் - தடவுதல்; அஃது இங்குப் பறித்தலைக் குறித்தது. கரைதலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. 'காம்பு' என்பது கடைக் குறையாய் நின்றது. "போய்" என்றது 'போக' என்பதன் திரிபு. உலகறி பழவினை, கயிலையில் மாதர்மேல் மனம் போக்கியது. அது, திருவெண்ணெய்நல்லூரில் அனைவரும் அறிய வெளிப்படுத்தப்பட்டதாகலின்,உலகறிந்ததாயிற்று. உரைக்குமாறு என்பது, 'உரையுமாறு' எனத் தொகுத்தலாயிற்று. 8. பொ-ரை: அணியவான ஊர்களில் உள்ளவர்களும், பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும், மனம் விரும்பி நினைக்குமாறு, பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து, அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் திரிய, நீர் நிறைந்த, பெரிய, கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து, ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து, நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற, பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான், துய்க்குமாற்றை அறிகின்றிலேன்! கு-ரை: "ஊரும், தேசமே" என்ற உம்மையும், ஏகாரமும் எண்ணிடைச் சொற்கள். "ஊர், தேசம்" என்றன, இடத்து நிகழ் பொருளை இடமாக் கூறும் பான்மை வழக்கு. "ஊர் வந்தது; தேசம் உய்ந்தது" என்றல்போல அஃறிணையாக முடிதலின், இன்னோரன்னவை ஆகுபெயராகா. யாண்டும் உள்ள மக்கள் விரும்பி நினைத்தல், வளமும், கடவுட்டன்மையும் பற்றி என்க. "உள்ளி" என்றதனை,
|