பக்கம் எண் :

1067
 
759.புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்

பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப

இலங்குமா முத்தினோ டினமணி இடறி

இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக்

கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்

குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை

மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.

9



'உள்ள' எனத் திரிக்க. 'நீர்' என்னும் பொருளைத் தருவதாகிய 'கார்' என்னும் பெயரடியாக, காரும் என்னும் பெயரெச்சம் வந்தது. தேர்தல்-ஆராய்தல்; அது கண்டு செல்லுதலைக் குறித்தது. 'வரும்பிறப்பில் வரும் துன்பம்' என்றது, சூள் பிழைத்த பாவம் தருவதனை. அதனை, இப்பிறப்பிற்றானே கண்ணொளியை இழப்பித்தும், உடம்பிற் பிணியைக் கூட்டியும் அறுத்தொழித்தமையின், "அம்மைநோய் இம்மையே ஆசறுத்தானை" என்று அருளிச்செய்தார். இதனால், இறைவன் தம்மை ஒறுத்த வழியும், பெரியோர் அதனை வன்கண்மை என்று வெறாது, கருணை என்றே மகிழ்தலை அறிக.

9. பொ-ரை: வயல்கள் வளம்படவும், அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும், நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு, ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும், மற்றும் பலவகை மணிகளையும் எறிந்து, இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி, எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க, கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன்!

கு-ரை: 'புலங்களை' என்ற ஐகாரம், சாரியை. பொன், ஆகுபெயர். யாற்றிடைப் புனல் பெருகிவருங்கால், பூசல் மிகுதலை,

"விருப்பொன்று பட்டவர் உளம்நிறை உடைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை: வையைத்