760. | மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி | | மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற | | அங்கையான் கழலடி யன்றிமற் றறியான் | | அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன் | | கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக் | | குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் | | தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் | | தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை. அறைகெனும் உரைச்சிறைப் பறைஎழ ஊரொலித் தன்று" -பரிபாடல்-6 "மாதர் மடநல்லார் மணலின் எழுதிய | பாவை சிதைத்த தெனஅழ ஒருசார்; | அகவயல் இளநெல் அரிகாற் சூடு | தொகுபுனல் பரந்தெனத் துடிபட ஒருசார், | ஓதம் சுற்றிய தூரென ஒருசார், | கார்தூம் பற்றது வானென ஒருசார், | பாடுவார் பாக்கங்கொண்டென, | ஆடுவார் சேரிஅடைந்தெனக், | கழனிவந்து கால்கோத்தெனப், | பழனவாளை பாளைஉண்டென, | வித்திடுபுலம் மேடாயிற்றென" | -பரிபாடல்-7 |
என்றாற்போல வகுத்துப் பாடுமாற்றான் அறிக. கலங்குதல், விரைவாலும், பலநிலங்களது சார்பாலும் என்க.10. பொ-ரை: மங்கை ஒருத்தியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தும், இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற, பகைத்தலையுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடையவனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாதவனாகியும், அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடியவனாகிய நம்பியாரூரன், கங்கை போலப் பொருந்திய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருக்துருத்தியிலும், திருவேள்விக்
|