பக்கம் எண் :

107
 

'மறிசேர்கையினனே' (தி. 7 ப. 26 பா. 4) எனத் தொடங்குவதும் 'இங்ஙனம் வந்து' எனத்தொடங்கப்படுவதும்' (தி. 7 ப. 51 பா. 4) காட்டப்பட்டுள்ளன. இறைவனே குருவாக எழுந்தருளி வந்தானாதலின், அவ்வாறு ஆட்கொள்ளப் பெற்ற அநுபவ ஞானியர் அப்பரம்பொருளையே தொழுதலல்லது உலகநுகர்ச்சிகளில் ஒருபோதும் சிந்தைசெலுத்தார் என்பது இத்திருப்பாடல்களால் விளக்கமாகும் செய்தியாம்.

ஏனையபிற:

இருள்மலநிலை, அருளது நிலை, அருளுருநிலை அஞ்செழுத்தருள்நிலை ஆகிய மூன்று நிலைகட்கும் மேற்கோட் பாடல்கள் நாயனாரே காட்டாது விட்டனரோ, அன்றித் தொகுக்கப் பெற்றுப் பின்னர் ஏட்டிற் சிதைந்தனவோ அறிதற்கு அரிதாக உள்ளது. இவை குறித்த சுந்தரர் தேவாரப்பாடல்கள் இப்பொருள் நெறியில் ஆயத் தக்கனவாம்.

" . . கள்ளமே பேசிக் குற்றமே செயினும்
குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைபல செய்தேன்"

(தி. 7 ப. 69 பா. 6)

"மலமெலாம் அறும் இம்மையே மறுமைக்கும்
வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்சமே"

(தி. 7 ப. 35 பா. 8)

முதலியன இருள் மலநிலை பற்றியனவாம்.
"எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர்

எண்ணிறந்தார்கள் மற்றெங்கும் நின்றேத்த

அவ்வவர் வேண்டியதே அருள் செய்து

அடைந்தவர்க்கே இடமாகி நின்றானை"

(தி. 7 ப. 67 பா. 8)

"எங்கேனும் இருந்துன் னடியேன் உனை நினைந்தால்
அங்கே வந் தென்னோடும் உடனாகி நின்றருளி"

(தி. 7 ப. 23 பா. 2)

எனவருவன முதலிய பகுதிகள் அருளது நிலை. அருளுரு நிலை பற்றி அமைந்தனவாம். இவ்வாறே

"அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி"

(தி. 7 ப. 83 பா. 1)