பக்கம் எண் :

1071
 
அறையும் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

இறைவன் என்றடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

1

762.வங்கம் மேவிய வேலை

நஞ்செழ வஞ்சர்கள் கூடித்

தங்கள் மேல்அட ராமை

உண்ணென உண்டிருள் கண்டன்

அங்கம் ஓதிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

எங்கள் ஈசன்என் பார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

2



எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.

கு-ரை: "ஆயின" என்றது, எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல். "சொல்லும் பொருளுமாகிய இருகூற்றுலகம்" என்பார், அவற்றுள் சிறப்புடைய வேதத்தை வேறெடுத்தோதி, ஏனையவற்றை, "மற்றுள பொருள்கள்" எனப் பொதுவிற் சுட்டி விடுத்தார். "துறை" என்றது, சமயத்தை. தோத்திரம் - புகழ். "தோத்திரத்தையுடைய இறை" என்க. 'இறை' என்பது அஃறிணை வாய்பாடாகலின், அத்திணை இருபாற்கும் பொதுவாய் ஈண்டுப் பன்மைப் பொருள் தந்தது. "தென்புலத்தார் தெய்வம்" (குறள் - 43) என்றதில், "தெய்வம்" என்றதுபோல, "தொன்மை" என்றது, தோற்றம் ஈறுகட்கு அப்பாற்பட்ட நிலையை. அஃது ஆகுபெயராய், அந்நிலையையுடைய பொருளைக் குறித்தது. எல்லாவற்றினும் மேலாய நன்மையாகலின், வீட்டினை "நன்மை" என்று அருளிச்செய்தார். புனல், காவிரியாற்றினது. இறைவன் - கடவுள்; இங்கு, அருளுவாரது குறிப்பால் முழுமுதற் கடவுள் என்னும் பொருளதாயிற்று. 'அடிசேர்ந்து பயன் பெறுதலேயன்றி' எனப் பொருள் தந்து நிற்றலின், "எம்மையும்" என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். "ஆள்" என்றது, முதனிலைத் தொழிற்பெயர். 'மற்றுள பொருள்களும் எல்லாம்' என்பதும் பாடம்.

2. பொ-ரை: மரக்கலம் பொருந்திய கடலின்கண் நஞ்சு தோன்ற, தங்கள்மேல் வந்து தாக்காது தடுத்துக் கொள்ளுதற் பொருட்டுச் சூழ்ச்சி செய்த தேவர்கள் ஒருங்கு கூடிச்சென்று 'இந் நஞ்சினை