763. | நீல வண்டறை கொன்றை | | நேரிழை மங்கை ஓர்திங்கள் | | சால வாள்அர வங்கள் | | தங்கிய செஞ்சடை எந்தை | | ஆல நீழலுள் ஆனைக் | | காவுடை ஆதியை நாளும் | | ஏலு மாறுவல் லார்கள் | | எம்மையும் ஆளுடை யாரே. | | 3 |
உண்டருளாய்' என்று வேண்டிக்கொள்ள அவ்வேண்டுகோளை மறாது ஏற்று உண்டு, அதனால், கறுத்த கண்டத்தை உடையவனாகியவனும், வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எங்களுக்குத் தலைவன்' என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர். கு-ரை: தாங்கள் இறவாமைப் பொருட்டு இறைவனுக்கு நஞ்சூட்டத் துணிந்தமைபற்றித் தேவரை, "வஞ்சர்கள்" என்றார். 'அடராமைக்கு' என, பொருட்டுப் பொருளதாகிய நான்காம் உருபு விரிக்க. 3. பொ-ரை: நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும், நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும், பிறை ஒன்றும், பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும், ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர். கு-ரை: "மங்கை" என்றது கங்காதேவியை. 'ஆல நிழலுள் எழுந்தருளியிருக்கின்ற' என்க. உள், ஏழனுருபு. தம்மொடு பொருந்தும் செயலாவது, இடைவிடாது நினைத்தல்.
|