பக்கம் எண் :

1073
 
764.தந்தை தாய்உல குக்கோர்

தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்

பந்த மாயின பெருமான்

பரிசுடை யவர்திரு வடிகள்

அந்தண் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

எந்தை என்றடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

4

765.கணைசெந் தீஅர வம்நாண்

கல்வளை யுஞ்சிலை யாகத்

துணைசெ யும்மதில் மூன்றுஞ்

சுட்டவ னேயுல குய்ய

அணையும் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

இணைகொள் சேவடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

5



4. பொ-ரை: உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய், ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும், உண்மையான தவத்தைச் செய்வோர்க்கு உறவான பெருமானும், அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய, அழகிய, குளிர்ந்த பூக்களையுடைய, நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எம் தந்தை' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.

கு-ரை: உண்மைத் தவம், சிவபிரானைப் பொதுநீக்கி வழிபடுதல். பந்தம் - தொடர்பு; உறவு. 'தன்மை' என்னும் பொருளதாகிய, 'பரிசு' என்பது, இங்கு அன்பினைக் குறித்தது. 'அடிகள்' என்பது, இங்கு, 'திரு' என்னும் அடைபெற்று வந்தது.

5. பொ-ரை: பொருந்திய உலகம் உய்தற்பொருட்டு, சிவந்த நெருப்பு அம்பாகியும், பாம்பு நாணியாகியும், மலை வளைகின்ற வில்லாகியும் நிற்க, ஒன்றற்கொன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனாகிய, எங்கும் சென்று சேர்கின்ற அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை,