பக்கம் எண் :

1074
 
766.விண்ணின் மாமதி சூடி

விலையிலி கலனணி விமலன்

பண்ணின் நேர்மொழி மங்கை

பங்கினன் பசுவுகந் தேறி

அண்ண லாகிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

எண்ணு மாறுவல் லார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

6

767.தார மாகிய பொன்னித்

தண்டுறை ஆடி விழுத்து

நீரில் நின்றடி போற்றி

நின்மலா கொள்ளென ஆங்கே



நாள்தோறும் அவனது இரண்டு செவ்விய திருவடிக்கண் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.

கு-ரை: "துணைசெயும்" என்றதற்கு, 'தமக்குத் தாமே நிகராகின்ற' என்று உரைப்பினுமாம். 'துணைசெய் மும்மதில்' என்பது பாடம் அன்று. ஏய் உலகு - பொருந்திய உலகு; என்றது, தேவருலகத்தை. இணை, இணைதல் என்னும் தன்மை.

6. பொ-ரை: விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி, விலைப்படும் தன்மை இல்லாத அணிகலங்களை அணிகின்ற தூயவனும், பண்ணினை ஒத்த சொல்லை உடைய மங்கையது பங்கை உடையவனும், ஆனேற்றை விரும்பி ஏறுபவனும், யாவர்க்கும் தலைவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் நினையுமாற்றினை வல்லவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையராவர்.

கு-ரை: "விலையிலி கலன்" என்றது, நகையை உள்ளுறுத்தருளியது. எனவே, 'என்பையும், தலையையுமே அணிகலனாக அணிந்தவன்' என்றவாறாயிற்று. இதற்குப் பிறவாறுரைப்பின், "மதிசூடி" என்றதனோடு இயையாமை அறிக.

7. பொ-ரை: சோழன் ஒருவன், பல பண்டங்களும் உளவாதற்கு ஏதுவாகிய காவிரியின் குளிர்ந்த துறையில் மூழ்கித் தனது