பக்கம் எண் :

1075
 
ஆரங் கொண்டஎம் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

ஈரம் உள்ளவர் நாளும்

எம்மையும் ஆளுடை யாரே.

7

768.உரவம் உள்ளதொர் உழையின்

உரிபுலி யதள்உடை யானை

விரைகொள் கொன்றையி னானை

விரிசடை மேற்பிறை யானை



முத்துவடத்தை வீழ்த்தி, வீழ்த்திய வருத்தத்தால் கரைஏறாது நீரிற்றானே நின்று, தனது திருவடியைத் துதித்து, 'இறைவனே, எனது முத்து மாலையை ஏற்றுக்கொள்' என்று வேண்ட, அங்ஙனமே அவ்வாரத்தைத் திருமஞ்சனக் குடத்துட் புகச்செய்து ஏற்றுக்கொண்ட, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனுக்கு நாள்தோறும் அன்பு உடையவராய் இருப்பவர், நாள்தோறும் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.

கு-ரை: இத்திருப்பாடலிற் குறித்த வரலாற்றைச் சேக்கிழார்,

வளவர் பெருமான் திருவாரம்

சாத்திக்கொண்டு வரும்பொன்னிக்

கிளரும் திரைநீர் மூழ்குதலும்

வழுவிப் போகக் கேதமுற

அளவில் திருமஞ் சனக்குடத்துள்

அதுபுக் காட்ட அணிந்தருளித்

தளரும் அவனுக் கருள்புரிந்த

தன்மை சிறக்கச் சாற்றினார்.

என இனிது விளங்க அருளிச் செய்தல் காண்க. (தி. 12 ஏ. கோ. பு. 77) "ஆதியை" என்றதனை, 'ஆதிக்கு' எனத் திரிக்க. 'ஈரம் உள்ளுவர்' எனப் பாடம் ஓதி, "ஈரத்தால் உள்ளுபவர்" எனத் திரியாதே உரைத்தல் சிறக்கும்.

8. பொ-ரை: வலிமையுள்ள மானினது தோல், புலியினது தோல் இவைகளை யுடையவனும், நறுமணத்தைக் கொண்ட கொன்றைமலர் மாலையை அணிந்தவனும், விரிந்த சடையின்மேல் பிறையை