பக்கம் எண் :

1076
 
அரவம் வீக்கிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

இரவும் எல்லையும் ஏத்து

வார்எம்மை ஆளுடை யாரே.

8

769.வலங்கொள் வாரவர் தங்கள்

வல்வினை தீர்க்கு மருந்து

கலங்கக் காலனைக் காலாற்

காமனைக் கண்சிவப் பானை

அலங்கல் நீர்பொரும் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

இலங்கு சேவடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

9



உடையவனும், பாம்பை உடம்பிற் பல இடங்களில் கட்டியுள்ளவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும், இரவிலும், பகலிலும் துதிப்பவர் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.

கு-ரை: 'உரம்' என்பது, 'உரவம்' என விரிக்கப்பட்டது. ஈண்டு, 'எம்மையும்' என்னும் உம்மை தொகுத்தல். இத்திருப்பாடலின் ஈற்றடிப் பாடம், இவ்வாறாகாது, பெரிதும் பிழைபட்டமை காண்க.

9. பொ-ரை: தன்னை வலம் செய்கின்றவர்களது வலிய வினையாகிய நோயைத் தீர்க்கின்ற மருந்தாய் உள்ளவனும், கூற்றுவனைக் காலாலும், காமனைக் கண்ணாலும் அவர்கள் கலங்கி அழியுமாறு வெகுண்டவனும் ஆகிய, அசைகின்ற நீர் கரையை மோதுகின்ற திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனது விளங்குகின்ற, செவ்விய திருவடியில் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.

கு-ரை: "அவர்" என்றது, பகுதிப்பொருள் விகுதி. "தங்கள்" என்றது சாரியை. 'வல்வினை தீர்க்கும் மருந்து' என்றது, ஏகதேச உருவகம். "கண்" என்றவிடத்து, மூன்றாவது விரிக்க. சிவத்தல் - வெகுளுதல். 'காலனைக் காலாலும், காமனைக் கண்ணாலும் கலங்கச் சிவப்பானை' என்க.