770. | ஆழி யாற்கருள் ஆனைக் | | காவுடை ஆதிபொன் னடியின் | | நீழ லேசர ணாக | | நின்றருள் கூர நினைந்து | | வாழ வல்லவன் றொண்டன் | | வண்டமிழ் மாலைவல் லார்போய் | | ஏழு மாபிறப் பற்று | | எம்மையும் ஆளுடை யாரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: சக்கரத்தை ஏந்தியவனாகிய திருமாலுக்கு அருள்புரிந்த, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனது பொன்போலும் திருவடி நிழலையே நினைந்து வாழ வல்ல வன்றொண்டனாகிய நம்பியாரூரனது வளவிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர், எழுவகைப்பட்ட அளவில்லாத பிறப்புக்களும் நீங்கப் பெற்று, மேலே சென்று, எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர். கு-ரை: திருக்கடைக்காப்பில், 'இத்திருப்பதிகத்தை நன்கு பாட வல்லவர்கள் எம்மையும் ஆளுடையார்' என்று அருளினார். அதனைப் பாடுதலே இறைவற்குத் தொண்டாய் நிற்றலின், அதனையுடையவர் சிவபெருமானுக்கு அடியராகும் நிலையுடையவராவர் என்பதுபற்றி, 'ஏழு மாபிறப்பும்' என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | மறைக ளாய நான்குமென | மலர்ந்த செஞ்சொற் றமிழ்ப்பதிகம் | நிறையும் காதலுடன்எடுத்து | நிலவும் அன்பர் தமைநோக்கி | இறையும் பணிவார் எம்மையும்ஆள் | உடயா ரென்றென் றேத்துவார் | உறையூர்ச் சோழன் மணியாரம் | சாததும் திறத்த உணர்ந்தருளி. | 76 | - தி. 12 சேக்கிழார். |
|